மீனவர் வலையில் சிக்கிய நடராஜர், பிள்ளையார் சிலைகள் !

மீனவர் வலையில் சிக்கிய நடராஜர், பிள்ளையார் சிலைகள் !

மீனவர் வலையில் சிக்கிய நடராஜர், பிள்ளையார் சிலைகள் !
Published on

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்று மணலில் உலோகத்திலான நடராஜர் மற்றும் பிள்ளையார் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து நீரின் வரத்து குறைந்துள்ளதால், திருச்சி முக்கொம்பு மேலணையான காவிரி ஆற்றில் மீனவர்கள் வலைவீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மணலில் புதைந்த நிலையில் உலோகத்தினாலான நடராஜர் மற்றும் விநாயகர் சிலைகள் மீனவர் வலையில் சிக்கியது. வலையில் சிக்கிய சிலைகளை அப்பகுதி மீனவர்கள் எடுத்து அருகில் வைத்தனர். பின்னர் வலையில் சிலைகள் சிக்கியது குறித்து மணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் ராஜேஷ்கண்ணாவுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் முத்து கிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து சிலைகளை கைப்பற்றினர். பின்னர் சிலைகள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. சிலைகளை பார்த்த மீனவர் மருதமுத்து செய்தியாளரிடம் கூறுகையில், “மீன் பிடித்தபோது இந்த இரண்டு சிலைகளும் வலையில் சிக்கியது. இந்த சிலைகள் குறிப்பு வருவாய்த் துறையினரிடம் தகவல் தெரிவித்ததின் பேரில் சிலைகளை கைப்பற்றிச் சென்றனர். இந்த சிலைகள் வேறு எங்கேயாவது திருடி காவல்துறைக்கு பயந்து ஆற்றில் வீசி சென்றனரா எனத் தெரியவில்லை” எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com