தமிழகத்தில் 50,000 இடங்களில் தொடங்கியது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் 50,000 இடங்களில் தொடங்கியது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் 50,000 இடங்களில் தொடங்கியது மெகா தடுப்பூசி முகாம்
Published on
தமிழ்நாட்டில் இன்று 10வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 50,000 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் 75 லட்சத்துக்கும் அதிகமானோர் இரண்டாவது தவணையை சரியான நேரத்தில் செலுத்தி முடிக்காமல் உள்ளனர். இதுவரை 74% பேர் முதல் தவணையும், 34% நபர்கள் இரண்டாம் தவணையும் செலுத்தி முடித்துள்ளனர். நவம்பர் இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் முதல் தவணை செலுத்தி முடிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணி சற்றே பாதிக்கப்பட்ட நிலையில் இன்றைய முகாமை பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மருத்துவத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னையில் 2000 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com