ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்ஷா’ திருவிழா

ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்ஷா’ திருவிழா
ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்ஷா’ திருவிழா

கோவை ஈஷா யோகா மையத்தில் ‘யக்ஷா’ கலைத் திருவிழா இன்று (மார்ச் 8) கோலாகலமாக தொடங்கியது.

இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரிக்கு முந்தைய 3 நாட்கள் ‘யக்ஷா’ கலைத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழா மார்ச் 8 முதல் 10 வரை நடக்க உள்ளது. முதல் நாளான இன்று பிரபல ஹிந்துஸ்தானி பாடகி திருமதி.கவுசிகி சக்ரபோர்த்தியின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.

சங்கீத் ரிசர்ச் அகாடமியின் முன்னாள் மாணவியான இவர் தன் பாடல் திறமையால் பி.பி.சி விருதை பெற்றவர். இவரது தந்தை அஜோய் சக்ரபோர்த்தியும் ஹிந்துஸ்தானி பாடகர் ஆவார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்விழாவிற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி ஆன்லைன் வாயிலாக யூ-டியூப்பில் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com