தமிழக மக்களின் அன்புக்கு நன்றி: வித்யாசாகர் ராவ்
தமிழக மக்கள் என் மீது கொண்டுள்ள அன்புக்கு நன்றி என பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 30ஆம் தேதி நியமித்து உத்தரவிட்டார். பன்வாரிலால் அக்.6ஆம் தேதி தமிழக ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் பொறுப்பு ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவ், இதுவரை தனக்கு ஒத்துழைப்பு அளித்த முதலமைச்சர், அமைச்சர்கள் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். தமிழக மக்கள் என் மீது கொண்டுள்ள அன்புக்கு நன்றி அவர்கள் மகிழச்சி, அமைதி, வளர்ச்சியுடன் செழித்தோங்க வேண்டும் எனவும் அவர் வாழ்த்தியுள்ளார்.
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நிறைவடைந்ததை அடுத்து மகாராஷ்ட்ரா ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.