ஆட்சி எப்படி இருக்கணும்? தங்கர் பச்சான் காட்டம்!
’ஆட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்த உருவானதுதான் தமிழீழம்’ என்று இயக்குனர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
இதுபற்றி முகப்புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழினம் தோற்றுக்கொண்டே இருப்பது எதிரிகளின் சூழ்ச்சியினால் மட்டுமே என்பதை இனியாவது புரிந்து விழித்துக் கொள்ள வேண்டும்.
ஆட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்த உருவானதுதான் தமிழீழம். அவ்வளவு அறிவும், திறமையும், வீரமும் இருந்தும் நம் சகோதரர்கள் ஒற்றுமையை இழந்ததனால் பகைவர்கள் உள் நுழைந்து நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக் குத்தி வீழ்த்தினார்கள். அதே நிலைதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதை இன்னும் கூட புரிந்து கொள்ளாமல் தமிழினம் குறித்து பீற்றிக் கொண்டிருக்கிறோம்.
பல்வேறு சாதிகளாக, மதங்களாக, அரசியல் கட்சித் ஆதரவாளர்களாக, நடிகர்களின் தொண்டர்களாக பிரிந்து கிடந்து நமக்குள்ளேயே சண்டையிட்டு அண்டி பிழைக்க வந்தவர்களை தொடர்ந்து தலைவர்களாக்கி அதிகாரத்தைக் கொடுத்தோம். அதனால்தான் தமிழன் பிள்ளைகள் தாய் மொழியில் கூட படிக்காதபடி சட்டங்கள் உருவாயின. நாம் அடிமைகளாக வாழ்வதோடு அல்லாமல் எதிர்காலத் தலைமுறைகளையும் அடிமையாக்கிக் கொண்டிருக்கிறோம்.