தமிழ்நாடு
தஞ்சையில் 15 சவரன் நகை மற்றும் இன்னோவா கார் திருட்டு
தஞ்சையில் 15 சவரன் நகை மற்றும் இன்னோவா கார் திருட்டு
தஞ்சையில் அடுத்தடுத்த வீடுகளில் 15 சவரன் நகை, 60ஆயிரம் ரூபாய் பணம், இன்னோவா கார் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
தஞ்சையை சேர்ந்த துளசிராமன், கவின்ராஜன் ஆகியோரின் வீடுகளில் 15 சவரன் நகை, 60ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இன்னோவா கார் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை தெற்கு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்த நபரே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்க கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அடுத்தடுத்த வீடுகளில் நடந்த இந்தக் கொள்ளை சம்பவத்தினால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.