பட்டுக்கோட்டை | சிபிஎஸ்இ பள்ளியில் படித்த மாணவர்கள் விவகாரத்தில் திருப்பம்!
பட்டுக்கோட்டையில் சிபிஎஸ்இ பள்ளியில் உரிய அங்கீகாரம் இல்லாததால் பாதிக்கப்பட்ட 19 மாணவர்கள் மாநில பாடப்பிரிவில் தேர்வு எழுதுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் பிரைம் என்ற சிபிஎஸ்இ பள்ளியில் உரிய அங்கீகாரம் இல்லாததால் 19 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் போனது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அக்டோபர் மாதம் NIOS மூலம் தேர்வு எழுதுவதாக முடிவு செய்யப்பட்டது.
இதில் திடீர் திருப்பமாக 19 மாணவர்களின் எதிர்காலம் கருதி மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுத முடிவெடுத்த பெற்றோர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் மாநில பாடத்திட்டத்தில் எழுத தேர்வு எழுத உள்ளனர் .
இவர்களுக்காக பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகிறது.