தஞ்சாவூர் : ஒரே துப்பட்டாவை இடுப்பில் கட்டிக்கொண்டு தாய் - மகள் எடுத்த விபரீத முடிவு!

தஞ்சை கல்லணைக் கால்வாய் ஆற்றில் குதித்து தாய் - மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை - மாதிரிப் படம்
தற்கொலை - மாதிரிப் படம்pt web

தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு அருகே உள்ள தெக்கூர் பகுதியில் கல்லணைக் கால்வாய் ஆற்றில் இரண்டு பெண் சடலங்கள் ஒன்றாக மிதந்து வந்துள்ளன.  இதனைப் பார்த்த பொதுமக்கள், சடலங்களை மீட்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தற்கொலை மரணம்
தற்கொலை மரணம்மாதிரிப்படம்

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த தாலுகா போலீஸார் சடலங்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் விளார் சாலை அருகே உள்ள தில்லைநகர் பகுதியைச் சேர்ந்த  செந்தில்குமார் மனைவி பத்மஜோதி (38) என்பதும், அவரது இளைய மகள் தீபிகா (15) என்பதும் தெரியவந்தது.

தற்கொலை - மாதிரிப் படம்
மதுரை: திருடுபோன நகைகளை சினிமா பாணியில் மீட்ட ஊர் பெரியவர்கள்

குடும்ப பிரச்னை காரணமாக கணவர் செந்தில்குமாரை விட்டு பிரிந்து பத்மஜோதி இளைய மகளுடன் தஞ்சாவூரிலும், செந்தில்குமார் அவரது மூத்த மகள் பூர்விகாவுடன் (17) திருவாரூரிலும் வசித்து வருகின்றனர். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பத்மஜோதி விரக்தி அடைந்து மகளுடன் சேர்ந்த இந்த துயர முடிவை எடுத்ததாக தெரிகிறது.

தற்கொலை
தற்கொலைமாதிரிப்படம்

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com