ஆண்கள் பிரிவில் ஹரிஷ், பெண்கள் பிரிவில் ஹரி பிரியா தஞ்சை மாரத்தானில் முதலிடம்
சர்வதேச தாய் மொழி தினத்தை முன்னிட்டு தஞ்சையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 1000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். உலகெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம் என்ற தலைப்பில் THE FEDERAL ஆங்கில இணைய தளம் மற்றும் சிட்டி யூனியன் பேங்க் இணைந்து தஞ்சாவூர் மாரத்தான் நடைபெற்றது. அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஐ மாநகராட்சி மேயர். சன் ராமநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும் பெண்களுக்கு 5. கி.மீ தூரமும் நடைபெற்ற போட்டியில் தஞ்சாவூர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆண்கள் பிரிவில் கோவையை சேர்த்த ஹரிஷ், பெண்கள் பிரிவில் தஞ்சையை சேர்த்த ஹரி பிரியாவும் முதலிடம் பெற்றனர். இதேபோல் முரளிதர ராவ், தன்யஸ்ரீ இரண்டாம் இடமும், அருண் பிரசாத், ஷாலினி ஆகியோர் மூன்றாம் இடமும் பெற்றனர். குறிப்பாக மாரத்தானில் பங்கேற்ற சிறப்பு பிரிவு குழந்தைகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு துரை. சந்திரசேகரன் பாராட்டுகளை தெரிவித்தார்.