
1781 ஆம் ஆண்டு நாகை துறைமுகத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். பின்பு 1799 ஆம் ஆண்டில் தஞ்சாவூரை வசப்படுத்தி பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு பிரதிநிதியை நியமித்தது. அவர் ரெசிடென்ட் என்று அழைக்கப்பட்டார் அவர் வாழ்ந்து நிர்வாகம் செய்த இந்த இடம்தான் ரெசிடென்சி என்று அழைக்கப்பட்டது. இந்த ரெசிடென்சி தஞ்சையில் ஆங்கிலேயர்களின் தலைமையகமாக செயல்பட்டது.
1842 முதல் 1855 வரை ரெசிடென்ஸ் பதவி இருந்து வந்தது. அந்த பதவியை கலெக்டர்கள் ஏற்றுக் கொண்ட பின்பு இந்த ரெசிடென்சி பங்களா 1863-ல் நீதிபதி குடியிருப்பாக மாறியது. ரெசிடென்ஸ்-க்கு பதிலாக ஒரு கலெக்டர் நியமிக்கப்பட்டார். அவருக்கு வல்லத்தில் குடியிருப்பு மற்றும் அலுவலகம் இருந்ததால் இந்த கட்டடம் நீதிபதி இல்லமாக மாறியது. 1863 ஆம் ஆண்டு முதல் இவை காவல்துறை அதிகாரிகளின் இல்லமாக செயல்பட தொடங்கியது. கடைசியாக 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இது டிஐஜி பங்களாவாக இருந்து வந்தது
இந்நிலையில், புதிதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டியதோடு அவர்களுக்கென புதிய குடியிருப்புகள் அமைக்கப்பட்ட பின்பு, இந்த இடம் முழுவதுமாக கைவிடப்பட்டது. 220 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த கட்டடம் தற்பொழுது பாழடைந்து பூத் பங்களாவாக மாறியுள்ளது.
220 ஆண்டுகள் வரலாற்றை கூறும் இந்த பங்களாவை மீட்டெடுத்து காட்சிப்படுத்த வேண்டும். பழமை மாறாமல் பராமரிக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் எண்ணமாக உள்ளது.