தீபன் கைது செய்யப்பட்டவர்pt web
தமிழ்நாடு
தஞ்சை | பள்ளி மாணவிக்கு தொந்தரவு; கட்சி பொறுப்பு வந்த மறுநாளே பாலியல் புகாரில் அதிமுக நிர்வாகி கைது!
தஞ்சையில் அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சையில் அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர். அதிமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளராக தீபன் என்பவரை நியமித்து, கட்சியின் தலைமை நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, தீபன் மீது அளிக்கப்பட்டிருந்த புகாரின் அடிப்படையில், தீபனை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.