ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைதுpt desk
தமிழ்நாடு
தஞ்சை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டுவர வேண்டும் என போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
செய்தியாளர்: ந.காதர் உசேன்
மத்திய அரசு, விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும், விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ,மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சம்யுக்த கிசான் மோட்சா அமைப்பு சார்பில் விவசாய சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் தஞ்சை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைதுpt desk
அப்போது திருச்சியில் இருந்து காரைக்கால் செல்லும் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காத நிலையில், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.