\
ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்: தங்கதமிழ்ச்செல்வன்

ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்: தங்கதமிழ்ச்செல்வன்

ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்: தங்கதமிழ்ச்செல்வன்
Published on: 

அதிமுக அம்மா அணியில் எந்த சலனமும் இல்லை எனவும் அனைவரும் ஒற்றுமையாகதான் இருக்கிறோம் எனவும் எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரனைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்ச்செல்வன், அமைச்சர்கள் நேற்று இரவு நடத்திய கூட்டம் பற்றி எதுவும் தனக்குத் தெரியாது எனக் கூறினார். சசிகலாதான் பொது செயலாளர் எனவும் டிடிவி தினகரன்தான் துணை பொது செயலாளராக தொடருவார் எனவும் தங்கதமிழ்ச்செல்வன் தெளிவுபடுத்தினார்.

100 அதிமுக எம்.எல்.ஏ-க்களும் 22 அமைச்சர்களும் ஒற்றுமையாக இருக்கிறோம் என கூறிய தங்கதமிழ்ச்செல்வன், அதிமுக அம்மா அணியில் எந்த சலனமும் இல்லை என தெரிவித்தார். ஐஎன்எஸ் போர்க்கப்பலுக்கு அனைவரும் சென்று சுற்றிப் பார்த்து விட்டு இப்போதுதான் வருகிறோம். நாங்கள் ஒற்றுமையாய் இருக்கிறோம் என்பதற்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்று கேட்டார் அவர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com