”அன்று குஜராத்தில் மோடி கேட்டாரே..”-பட்ஜெட் கேள்விகளுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சரமாரி பதில்!

சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்ற நிலையில், நிறைவுநாளில் பல கேள்விகளுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.
தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசுபுதியதலைமுறை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்19ம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதங்களும் நடைபெற்றது. இந்நிலையில், நிறைவுநாளில் நிறைவுநாளில் பல கேள்விகளுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.

அவர் பேசியதன் சில முக்கிய விஷயங்கள் இங்கே..

”எங்கள் மாநிலம் 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒன்றியத்திற்கு தருகிறது. ஆனால் எங்களுக்கு ஒன்றிய அரசு திருப்பி கொடுப்பது என்ன? எங்கள் மாநிலம் ஒன்றிய அரசிடம் கையேந்தி இருக்கும் மாநிலமா?- இப்படி கேட்டது யார் தெரியுமா 2012 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி அவர்கள்தான். இவரின் அதே குரலைத்தான் இன்று தமிழ்நாட்டில் உரிமைக்குரலாக இங்கே இருந்து நாம் எழுப்புகிறோம்

ஒன்றிய அரசு நிதியை மாநிலங்களுக்கு எவ்வாறு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதை நீதி குழு ஒவ்வொரு 5 ஆண்டும் ஒரு பரிந்துரை செய்தது. பத்தாவது நிலை குழுவில் 6.64 சதவீதம் என்ற பங்கை தொடர்ந்து 15 நிதி குழுவில் 4.8% சதவீதமாக குறைத்தது. தொடர்ந்து வரும் நிதிக்குழுவில் நம்முடைய மாநிலத்திற்கு அநீதியை இழைக்கிறது. மேலும் ஒன்றிய அரசு வரிகள் மீது மேல்வரை மட்டும் கூடுதல் வரியை விதிக்கிறது.

நியாயமாக பார்த்தால் வரித் தொகையை மாநில அரசுடன் பகிர்ந்து அளிக்க வேண்டும் ஆனால் ஒன்றியஅரசு இந்த தொகையை தானே வைத்துக் கொள்கிறது

ரயில்வே மெட்ரோ பணியில் அவர்கள் மூலதனத்தை செலுத்தாத நிலையில் அவர்களுடைய பங்கையும் சேர்த்து வருங்காலத்தில் நாங்களே மெட்ரோ திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து நமது மாநிலத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வோம் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்.

இதைத் தவிர, பல்வேறு திட்டங்களை மாநில அரசு தனது நிதியிலிருந்து செலவு செய்து வருகிறது. புதுமைப்பெண் திட்டத்தைப்போலவே அரசு மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ் புதல்வன் திட்டத்திற்காக 360 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com