நீதிமன்றத்தை சமாளிக்கவே இந்த நாடகம்: தங்கத் தமிழ்ச் செல்வன்

நீதிமன்றத்தை சமாளிக்கவே இந்த நாடகம்: தங்கத் தமிழ்ச் செல்வன்

நீதிமன்றத்தை சமாளிக்கவே இந்த நாடகம்: தங்கத் தமிழ்ச் செல்வன்
Published on

திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்தும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு சிரிப்பாக இருக்கிறது என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என கடந்த 31ஆம் தேதி, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்தல் தொடர்பாக இதுவரை நடைபெற்ற பணிகள் அனைத்தும் செல்லாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் கூறும்போது, ‘’தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு சிரிப்பாக இருக்கிறது. தலைமை செயலாள ரிடம் கேட்டுதான் தேர்தலை அறிவித்திருப்பார்கள். தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர்கிட்ட கேட்டு தேர்தலை அறிவிச்சிருப்பாங்க. இந்த நேரத்துல கஜா புயல் பாதிப்பு, வீடு இடிஞ்சிருக்கு, வாக்காளர் அடையாள அட்டை தொலைஞ்சு போயிருக்கும்னு சொல்றாங்களே... நான் கேட்கிறேன், புயல் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கலாம்னு சொல்லியாச்சு. அதுக்கு தடையில்ல. அடையாள அட்டை இல்லைனா, கவர்ன்மென் டே பூத் ஸ்லிப் கொடுக்குது. அதை வச்சு ஓட்டு போடலாம்.

அதனால ஓட்டு போடறதுக்கும் தடையில்ல, நிவாரணம் வழங்கறதுக்கும் தடையில்ல. இது ரெண்டுதான் எதிர்க்கட்சிகள் வைக்கிற கோரிக்கை. அது ரெண்டும் நடக்குது. ஆனா, இதைக் காரணம் காட்டி தேர்தலை நிப்பாட்டுறீங்க? இதுல என்ன சூட்சுமம் இருக்குன்னா, பிப்ரவரி 7 ஆம் தேதிக் குள்ள தேர்தலை நடத்துவேன்னு கோர்ட்ல உறுதிமொழி கொடுத்ததால, கோர்ட்டை, தாஜா பண்ண இந்த அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டிருக்கு.

பிறகு நீங்க (அரசாங்கம்) பார்த்து எல்லா கட்சியையும் கூட்டி, தேர்தல் வேண்டாம்னு கோரிக்கை வையுங்க. இதை வச்சு கோர்ட்ல நாங்க (தேர்தல் கமிஷன்) தப்பிச்சுக்கிடுவோம். இந்த டிடிவி தினகரன்கிட்ட தோற்கதுல இருந்தும் காப்பாத்திக்கலாம் அப்படின்னு திட்டமிட்டு தேர்தலை தள்ளிவச்சிருக்காங்க.’’ என்றார் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com