ஓ.பி.எஸ், தேர்தல் கருத்து: தம்பிதுரை புது விளக்கம்
தமிழகத்தில் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதற்கு தம்பிதுரை புதுவிளக்கம் அளித்துள்ளார்.
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்கிடையே சுமூகமான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும். இரு அணிகளும் எப்போது வேண்டுமானாலும் இணைவது சாத்தியமான ஒன்று தான்.
எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்கும் வலிமையுடன் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செயல்படுவார்கள்’ என்றார்.
தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, ‘தேர்தலை எதிர்கொள்ள எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவினருக்கு கற்றுத்தந்த பாடம். அதன் அடிப்படையில்தான் ஓ.பன்னீர்செல்வம் அப்படிக் கூறியிருப்பார்’ என்று தம்பிதுரை விளக்கம் அளித்தார்.