தமிழின வளர்ச்சி - ‘தகைசால் தமிழர்’ பெயரில் புதிய விருதை உருவாக்க முதல்வர் உத்தரவு

தமிழின வளர்ச்சி - ‘தகைசால் தமிழர்’ பெயரில் புதிய விருதை உருவாக்க முதல்வர் உத்தரவு

தமிழின வளர்ச்சி - ‘தகைசால் தமிழர்’ பெயரில் புதிய விருதை உருவாக்க முதல்வர் உத்தரவு
Published on

தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த ’தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். விருதுடன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்று ஆகியவற்றை சுந்திர தின விழாவில் முதல்வர் வழங்குவார் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது.

இந்த விருதாளரை தேர்வுசெய்ய தமிழக முதல்வர் தலைமையில், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் சுந்திர தினத்தன்று கல்பனா சாவ்லா விருது, வீரதீர செயல்களுக்கான விருதுடன் தகைசால் தமிழர் விருதும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com