\
வெயிட்டேஜ் முறையில் விரைவில் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன்

வெயிட்டேஜ் முறையில் விரைவில் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன்

வெயிட்டேஜ் முறையில் விரைவில் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன்
Published on

வெயிட்டேஜ் முறையில் விரைவில் மாற்றம் கொண்டு வருவோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தமிழகத்தில் சிறப்பான முறையில் தூய்மையை பராமரிக்கும் பள்ளிகளுக்கான மத்திய அரசின் விருதுகளை, சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். 

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை அரசு நன்றாக உணர்ந்துள்ளது. அவர்கள் கண்ணீர் சிந்தாதவாறு அவர்களின் நிலையை பரிசீலித்து, அதற்கான குழு அமைத்து, துயரம் தீர்க்கப்படும். விரைவில் வெயிட்டேஜ் முறை மாற்றத்திற்காக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com