டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி மூலம், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 29, 30-ம் தேதிகளில் ’டெட்’தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் குறிப்பிட்ட பள்ளிகளில் வழங்கப்படுகின்றன. தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தனித் தனியாக, விண்ணப்பம் பெற வேண்டும். விண்ணப்பம் பெறும் இடங்கள், மாவட்ட வாரியாக டி.ஆர்.பியின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க தனியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசி நாள், மார்ச் 23ஆம் தேதி. ஒருவருக்கு ஒரு தேர்வுக்கு, ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படுகிறது. http:/trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப விநியோக, விண்ணப்ப சமர்ப்பிப்பு மையங்களை அறியலாம்.