\
மதுபோதையில் காரை வீட்டிற்குள் விட்ட ஓட்டுநர்.! உள்ளிருந்தோர் அலறியடித்து ஓட்டம்!

மதுபோதையில் காரை வீட்டிற்குள் விட்ட ஓட்டுநர்.! உள்ளிருந்தோர் அலறியடித்து ஓட்டம்!

மதுபோதையில் காரை வீட்டிற்குள் விட்ட ஓட்டுநர்.! உள்ளிருந்தோர் அலறியடித்து ஓட்டம்!
Published on

மது போதையில் அதிவேகமாக காரை ஒட்டிய ஓட்டுநர் காரை வீட்டிற்குள் விட்ட சம்பவம் பழனியில் நடந்துள்ளது.

பழனி ஆர்எம்கே நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த். கார் மெக்கானிக்காக பணிபுரியும் இவர் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு பழனி-கோவை புறவழிச் சாலையில் அதிவேகமாக வந்துள்ளார். அப்பொழுது கொடைக்கானல் ரோடு அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வீட்டிற்குள் புகுந்தது.

இதனையடுத்து அங்கிருந்தோர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கார் உள்ளே புகுந்ததால் வீடு முழுவதுமாக சேதம் அடைந்தது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த பழனி அடிவாரம் காவல் துறையினர், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com