காதலனை ஆள்வைத்து கடத்திய சென்னை ‘டென்னிஸ் வீராங்கனை’ கைது

காதலனை ஆள்வைத்து கடத்திய சென்னை ‘டென்னிஸ் வீராங்கனை’ கைது

காதலனை ஆள்வைத்து கடத்திய சென்னை ‘டென்னிஸ் வீராங்கனை’ கைது
Published on

காதலனை ஆள் வைத்து கடத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வாசவி என்பவர், டென்னிஸ் வீராங்கனையாக இருந்து வருகிறார். இவரும், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நவீத் அகமதுவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் நவீதை கடத்திய அடையாளம் தெரியாத நபர்கள், அவரிடம் இருந்த ஐஃபோனையும், கை கடிகாரத்தையும் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பான காவல்துறை விசாரணை நடத்தியபோது, நவீதின் காதலி வாசவியே, அவரை ஆள் வைத்து கடத்தியது தெரியவந்தது. தனக்கும், காதலன் நவீதுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாக வாசவி கூறியுள்ளார். அதனால், தம்மோடு நெருக்கமாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக நவீத் மிரட்டியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

புகைப்படங்களை அழிப்பதற்காகவே செல்ஃபோனை பறித்ததாகவும் வாசவி தரப்பில் தெவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக டென்னிஸ் வீராங்கனை வாசவியை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக வடபழனி மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் மகன் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com