மூதாட்டிக்கு  உதவிய போக்குவரத்து எஸ்ஐ
மூதாட்டிக்கு உதவிய போக்குவரத்து எஸ்ஐpt desk

தென்காசி | சாலையை கடக்கத் திணறிய மூதாட்டிக்கு உதவிய போக்குவரத்து எஸ்ஐ - குவியும் பாராட்டு

அக்னி நட்சத்திர வெயிலில் மூதாட்டியை கைபிடித்து சாலையை கடக்க உதவிய போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளரின் வீடியோ வைரலாகி வருகிறது.
Published on

செய்தியாளர்: டேவிட்

தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், முதியோர் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வயதான மூதாட்டி ஒருவர் கோயில் அருகே உள்ள நான்கு முக்கு சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் ராஜன், பரபரப்பாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தினார். இதையடுத்து வயதான மூதாட்டியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று சாலை கடக்க உதவினார்.

மூதாட்டிக்கு  உதவிய போக்குவரத்து எஸ்ஐ
தேனி | 40 ஆண்டுகளுப் பிறகு ஊர் திரும்பிய மகன்... ஆரத்தழுவி கண்ணீர் விட்ட தாய் - நடந்தது என்ன?

போக்குவரத்து உதவி ஆய்வாளர் இந்த செயல் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com