‘ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது’ - ஆபத்தான பயணத்துக்கு முடிவுகட்டிய காவல்துறை!

தென்காசியில் கல்லூரிக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் விபரீத செயலில் ஈடுபட்ட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி - ஆபத்தான பைக் சாகசம்
தென்காசி - ஆபத்தான பைக் சாகசம்புதிய தலைமுறை

தென்காசி மாவட்டத்தில் அச்சன்புதூர், இலத்தூர், செங்கோட்டை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் பள்ளி, கல்லூரி பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் விபரீத செயலில் ஈடுபட்ட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அந்த இளைஞர்கள், சரியாக பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியார் கல்லூரி முன்பு சாகசங்களில் ஈடுபட்டதுடன் அந்த காணொளியை வலைதளங்களில் பதிவிட்டதாக புகார் வந்தது. அதன்பேரில் அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com