குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு: படிகளில் ஓடும் தண்ணீர்!

குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு: படிகளில் ஓடும் தண்ணீர்!
குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு: படிகளில் ஓடும் தண்ணீர்!

தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நேற்று காலையே குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடைவிதிக்கப் பட்டிருந்த நிலையில், நேற்று மாலை முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போத தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவிகளில் அதிக அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து இரண்டாவது நாளாக குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com