\
தென்காசி: ஊரடங்கு விதிகளை மீறி அதிவிமர்சையாக நடைபெற்ற திருமணம்

தென்காசி: ஊரடங்கு விதிகளை மீறி அதிவிமர்சையாக நடைபெற்ற திருமணம்

தென்காசி: ஊரடங்கு விதிகளை மீறி அதிவிமர்சையாக நடைபெற்ற திருமணம்
Published on

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஊரடங்கு காலத்தில் யானை மீது அமர்ந்து மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்ற நிலையில், அதிவிமர்சையாக திருமணம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காசியாபுரம் பகுதியில் நேற்று திருமணம் ஒன்று நடைபெற்றது. ஊரடங்கு காலமான இந்த நேரத்தில் நடைபெற்ற திருமணத்தில் செண்டைமளம் முழங்க சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் மாப்பிள்ளையை யானை மேல் அமர்த்தி ஊர்வலமாக வந்தனர்.

மேலும் இந்த திருமணத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில் கட்டுப்பாடுகளை மீறி திருமணம் நடைபெற்றதாக,தற்போது இந்த காட்சிகளைக் கொண்டு திருமண வீட்டாரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com