மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிப்பு! முழு விவரம் இதோ!

33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு 2018 ஜூனில் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டது. அதன் பின்னர் 6 மாதங்கள் கழித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2019-ல் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய வேளையில் மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

1,264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அதன் மதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வந்த வண்ணம் இருந்தது. இதை தொடர்ந்து மொத்த நிதித் தேவையில் 82% சதவீத தொகையான ஜெய்கா நிறுவனம் மூலம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் மற்றும் டிசைன் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 222.47 ஏக்கரில் எய்ம்ஸ்க்கான கட்டட பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.

இத்துடன் 870 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சிகிச்சை வளாகம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கான 30 படுக்கைகளுடன் கூடிய அறை, 150 எம்பிபிஎஸ் மாணாக்கர்கள் செவிலியர்கள் பயிலும் வகையிலான வகுப்பறைகள், ஆடிட்டோரியம், உணவகம், மாணாக்கர்களுக்கான தங்கு விடுதிகள், இயக்குனருக்கான தங்கு இல்லம், உணவகம், பணியாளர்களுக்கான வீடுகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ்

2026 அக்டோபர் மாதத்துக்குள் எய்ம்ஸ் பணிகள் முடிக்கப்படுமென்று ஒப்பந்தம் தெரிவித்த நிலையில், எப்போது கட்டுமான பணிகள் துவங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகாமலேயே இருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com