\
மின்சாரம் தாக்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு
Published on

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே மின்சாரம் தாக்கி 10 வயது சிறுவன் உயிரிழந்தான். 

பூந்தமல்லியை அடுத்த பாப்பன்சத்திரம் என்ற கிராமத்தில் மொட்டை மாடியில் 5 சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது பந்தானது வீட்டின் போர்ட்டிகோ மீது தவறிவிழுந்தது. இதனை எடுக்க முற்பட்ட போது, கைகளில் எட்டுமளவுக்கு மாடிக்கு மிக அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பி மிது தெரியாமல் மோதியதில் இரண்டு சிறுவர்களும் தூக்கி விசப்பட்டனர். 

இதில் முகமது மிராஜ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மற்றொரு சிறுவன் ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். மின்சாரம் தாக்கி 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com