சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 10 பேருக்கு ஆயுள்!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 10 பேருக்கு ஆயுள்!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 10 பேருக்கு ஆயுள்!
Published on

கடலூரில் இரண்டு சிறுமிகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் பாதிரியார் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படித்த 2 மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 23 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது. இவர்களில் முக்கிய குற்றவாளி சதீஷ்குமார் உள்பட 4 பேர் தலைமறைவாக உள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்து விட்டனர். மீதமுள்ள 17 பேர் மீதான வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் மகாலட்சுமி என்பவரைத் தவிர மீதமுள்ள 16 பேரும் குற்றவாளிகள் என கடந்த 4ஆம் தேதி நீதிபதி தீர்ப்பளித்தார். இவர்களில் 8 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள். இந்த 16 பேருக்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

அதன்படி டவர் ஆனந்தராஜ், பாலசுப்பிரமணி ஆகியோருக்கு 4 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. செல்வராஜ் என்பவருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கலா, தனலட்சுமி, பாத்திமா, ஸ்ரீதர், மோகன்ராஜ், மதிவாணன் ஆகிய 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அன்பழகன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பாதிரியார் அருள்தாஸுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

ராதா, ஷர்மிளா பேகம், ராஜலட்சுமி ஆகியோருக்கு 20 ஆண்டுகளும், அமுதா, ராதிகா ஆகியோருக்கு 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பின் போது கருத்து தெரிவித்த நீதிபதி, தங்கள் பிள்ளைகளின் வயதுள்ள சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளியது கொடுங்குற்றம். வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள அச்சிறுமிகளை உணவு வாங்கித் தருவதாகக் கூறி கடத்தி கொடுமை இழைத்ததை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com