மாநகராட்சி காய்கறி சந்தைக்கு பதிலாக ஆவடியில் தற்காலிக காய்கறி சந்தை

மாநகராட்சி காய்கறி சந்தைக்கு பதிலாக ஆவடியில் தற்காலிக காய்கறி சந்தை
மாநகராட்சி காய்கறி சந்தைக்கு பதிலாக ஆவடியில் தற்காலிக காய்கறி சந்தை

கொரோனா பரவல் காரணமாக ஆவடியில் செயல்பட்டு வந்த மாநகராட்சி காய்கறிகள் சந்தை மூடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தற்காலிக சந்தையை அமைச்சர், ஆட்சியர் துவக்கிவைத்தனர்.

ஆவடி மாநகராட்சி காய்கறி சந்தையை தற்காலிகமாக மூடிய நிலையில், ஆவடி அருகே காமராஜர் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் அமலுக்கு வந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி ஆவடி மாநகராட்சி காய்கறி சந்தையை மாநகராட்சி ஆணையர் நாராயணன் மூடினார்.

இதையடுத்து தற்காலிக சந்தையை அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் முகக்கவசம் அணியவும் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்த்திடவும் அரசு கூறும் நெறி முறைகளை பின்பற்றவும் பொதுமக்களை அமைச்சர் அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com