கனமழை எதிரொலி.. பொதுமக்கள் தங்க தற்காலிக முகாம்கள் அமைப்பு

மழை காரணமாக திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள எம்.வி.புரம். ப்ரைமரி மேல்நிலைப்பள்ளி மற்றும் மீனாட்சிபுரம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நெல்லையில் கனமழை
நெல்லையில் கனமழை

இதேபோல் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள கல்லணை மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்கேட் பள்ளி ஆகியவற்றிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்காலிக முகாம்கள் அமைப்பு
“பாதுகாப்பாகவும் கவனத்துடனும் இருங்கள்”- கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு EPS கோரிக்கை!

குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் வந்து தங்கும்படி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com