\
கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த டெம்போ – 4 பெண்கள் உட்பட 16 தொழிலாளர்கள் காயம்

கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த டெம்போ – 4 பெண்கள் உட்பட 16 தொழிலாளர்கள் காயம்

கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த டெம்போ – 4 பெண்கள் உட்பட 16 தொழிலாளர்கள் காயம்
Published on: 

சத்தியமங்கலம் அருகே இளநீர் வெட்டும் தொழிலாளர்கள் சென்ற டெம்போ கவிழ்ந்து 16 பேர் காயமடைந்தனர்.

சத்தியமங்கலம் அடுத்த புது வடவள்ளியைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 16 பேர் இளநீர் பறிக்கும் வேலைக்காக வடவள்ளியில் இருந்து டெம்போவில் அத்தானி சென்று கொண்டிருந்தனர். அப்போது டெம்போ புது வடவள்ளி முருகன் கோவில் வளைவில் சென்றபோது அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டெம்போ சாலையோரம் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

இதில், பயணித்த 4 பெண்கள் உட்பட 16 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 16 பேரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் மகேந்திரன் உட்பட 4 பேர் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com