''தெலங்கானாவில் போட்டி இல்லை'' - தெலுங்கு தேசம் அறிவிப்பு

''தெலங்கானாவில் போட்டி இல்லை'' - தெலுங்கு தேசம் அறிவிப்பு
''தெலங்கானாவில் போட்டி இல்லை'' - தெலுங்கு தேசம் அறிவிப்பு

தெலங்கானா மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது.

ஆந்திராவும், தெலங்க‌னாவும் தனித்தனி மாநிலங்‌களாக கடந்த 2014ம்‌ ஆண்டு பிரிந்தன. இதை‌யடுத்து, தெலங்கானாவின் பிரதா‌ன கட்சியாக இருக்கும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில், தெலுங்கு தேச க‌ட்சியின் நிர்வா‌‌கிகளும் தொண்டர்களும் சேரத் தொடங்கினர். சந்திரசேகர ராவ் அங்கு செல்வாக்கு மிக்க தலைவராக மாறினார். தற்போது அவர் தலைமையிலான ஆட்சி அங்கு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே கடந்தாண்டு நடந்த தெலங்கானா பேரவை தேர்தலில் காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் 2 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தெலுங்கானாவில் போட்டியிடுவது இல்லை எனத் தெலுங்கு தேசம் முடிவெடுத்துள்ளது. இது தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான முடிவாக பார்க்கப்படுகிறது. மேலும், 37 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறை‌யாக தெலுங்கு தேசம் கட்சி இல்லாமல் தெலங்கானா பகுதியி‌ல் தேர்தல் நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com