\
காரைக்கால் வந்த தெலங்கானா அமைச்சரின் உறவினர் : கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை

காரைக்கால் வந்த தெலங்கானா அமைச்சரின் உறவினர் : கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை

காரைக்கால் வந்த தெலங்கானா அமைச்சரின் உறவினர் : கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை
Published on

காரைக்காலில் தெலங்கானா அமைச்சரின் உறவினர் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தெலங்கானா அமைச்சர் மல்லாரெட்டியின் உறவினர் அசோக். இவர் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வழிபாடு செய்வதற்காக தனது குடும்பத்தினருடன் காரில் வந்துள்ளார். நேற்று கும்பகோணத்தில் தங்கியிருந்த இவர், இன்று திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். குடும்பத்தினர் அனைவரும் குளத்திற்கு சென்று நீராடிவிட்டு வந்துள்ளனர்.

அப்போது பார்க்கிங் செய்யப்பட்டிருந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். காரை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த கைப்பை திருடப்பட்டிருந்தது. அவர்கள் குளத்திற்கு சென்றதை அறிந்த நபர்கள், நோட்டமிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது. அந்த கைப்பைக்குள் ஒரு சவரன் செயின் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் இருந்ததாக அசோக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருநள்ளாறு காவல்துறையினர், கோயிலை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடர்களை தேடி வருகின்றனர். காரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 4 பேர், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com