தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்PT

“ஆளுநர் தேவை இல்லை என்றால், அப்பொழுது ஏன் ராஜ்பவன் படியை மிதித்தார்கள்?” - ஆளுநர் தமிழிசை கேள்வி

“ஆளுநர் தேவை இல்லை என்றால், எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஏன் ராஜ்பவன் படியை மிதித்தார்கள்?” - தெலங்கானா ஆளுநர் தமிழிசை

உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று திருச்சி சென்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரண்டு மணி நேரம் பெண்களுக்கான நேர சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதுபெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் மாதம் ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்படாமலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து சில பேர் வந்து ஜிப்மரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஜிப்மரில் ஏழை மக்களுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. வேண்டுமென்று அங்கே சில பிரச்னைகளை ஏற்படுத்த வேண்டும் என சில கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். நிர்வாக ரீதியாக எல்லாவற்றையும் சரி செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

கர்நாடகா தேர்தல் பற்றி கேட்டதற்கு, அதுபற்றி கருத்து சொல்ல முடியாது என்று அவர் கூறினார்.

மேலும், ‘ஆளுநர் என்ற ஒரு பதவி தேவையில்லை’ என்ற ஒரு கருத்தை தமிழகத்தில் தொடர்ந்து வைக்கப்படுவது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சௌந்திரராஜன்,

“ஆளுநர் பதவி தேவையில்லை என்று சொல்கிறார்கள். சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளான நிலையில், நமது அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநர் பதவி ஒன்று கொண்டு உள்ளது. ஆனால், இவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பொழுது ஆளுநர் பதவி தேவையில்லை என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்PT

எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஆளுநர் தேவை இல்லை என்றால், ஏன் ராஜ்பவன் படியை மிதித்தார்கள்? அப்போது எதற்கெடுத்தாலும் ராஜ்பவன் சென்று புகார்களை கொடுத்தார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநர் வேண்டும். ஆளும்கட்சியாக இருக்கும் பொழுது ஆளுநர் வேண்டாம்? ஆளுநர் வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து முதலில் நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள். உங்களது எண்ணத்தில் நிலையற்ற தன்மை உள்ளது. அதனால் நேரத்திற்கு ஏற்றார்போல் பேசுகிறீர்கள் என்றுதான் என்னால் சொல்ல முடியும்.

நான் தேர்தல் பற்றி கருத்து சொல்ல மாட்டேன். அதேநேரம் அரசியல் ரீதியாக சில கருத்துக்களை சொல்வதை யாரும் தடுக்க முடியாது. கருத்துரிமை இருக்கிறது; சாதாரண மனிதனுக்கு கருத்துரிமை இருப்பது போல, ஆளுநருக்கும் கருத்துரிமை இருக்கிறது. கருத்து சொல்வதில் யாரும் யாரையும் தடுக்க முடியாது. எதிர்க்கருத்து வேண்டாம்.

TN Governor RN Ravi
TN Governor RN Ravi

ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல கூடாது என்பது முடியாது. ஆளுநரை விமர்சனம் செய்தால், அதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். நம் கருத்து உரிமை என்பது நமக்கு வேண்டிய கருத்துக்கள் சொல்லப்பட்டால் அது கருத்து உரிமை. அது திரைப்படத்திலும் வந்தால் சரி. ஆனால் வேண்டாததைப் பற்றி சொன்னால், உடனே அந்த திரைப்படத்தை தடை செய்யப்பட வேண்டும்.

இன்னொரு சமூகத்தை குறை சொன்னாலும் பரவாயில்லை, எனக்கு வேண்டாத கருத்துகளை, இன்னொரு சமூகத்து குறைகளை சொன்னால், அதற்கு கருத்து உரிமையில் கருத்து ஒற்றுமை இல்லை என்பதுதான் உண்மை.

ஒரு சட்ட மசோதா பற்றி பேச முடியாது. பல காரணங்கள் இருக்கலாம். ஆளுநர் அதை அலசி ஆராய்ந்து முடிவெடுக்க கால அவகாசம் உள்ளது. இந்த ஒரு சட்டத்தை (ஆன்லைன் ரம்மி தடை) குறிப்பிடவில்லை. அதற்காக விமர்சனம் செய்து கொண்டிருக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுக்கு பாலாமாக, பலமாக ஆளுநர்கள் இருக்கிறார்கள். அதனால் ஆளுநர்களை ஆளுநர்கள் போல் நடத்துங்கள், ஆளுநர்களை ஆளுநர்கள்போல் நடத்தாமல் அவர்களை செயலாற்றுங்கள் என்று சொல்வது எப்படி?.

Online Gambling
Online GamblingFile Image

அரசாங்கம், ஆளுநர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர் சில கருத்துக்களை சொல்லும் பொழுது எதிர்க்கருத்து சொல்ல உரிமை உள்ளது. ஆனால், கடுமையாக விமர்சனம் செய்வது சரியல்ல என்பது எனது கருத்து.

‘தி கேரள ஸ்டோரி’ படம் பற்றி பேச கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும். அதை நான் பார்க்க வேண்டும் என்றுதான் உள்ளேன். பிரதமர் மோடி சொன்னதுபோல், தீவிரவாதம் எந்த இடத்தில் இருந்தாலும், அதை அழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சிலர் எதிர் கருத்துக்களை சொல்கிறார்கள்; அதற்கு சுதந்திரம் உள்ளது. மற்ற நேரங்களில் இதனை திரைப்படமாக பார்க்க வேண்டும் என்கிறார்கள். இப்பொழுது மட்டும் தடை கேட்கிறார்கள்.

தீவிரவாதம் எந்த விதத்திலும் யாரையும் பாதித்துவிடக்கூடாது. பாரத பிரதமர் அதைத்தான் வலியுறுத்தி உள்ளார். நானும் அந்த படத்தை பார்க்க போகிறேன்.

அடிக்கடி, திரும்பத் திரும்ப அறிவிப்புகளை கொடுக்கும் அரசை பார்த்திருக்கிறோம். ஆனால் அறிவிப்பை கொடுத்து திரும்பப் பெறும் அரசாக திமுக அரசு உள்ளது என்பது எனது கருத்து” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com