பேருந்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் : மாணவர் கைது

பேருந்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் : மாணவர் கைது
பேருந்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் : மாணவர் கைது

சென்னை எழும்பூர் ரயில்நிலையம் எதிரே பேருந்து நடத்துநரை தாக்கிய விவகாரத்தில் தெலங்கானா கல்லூரி மாணவர் லட்சுமணன் கைது செய்யப்பட்டுள்ளார். 

தெலங்கானாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் புதுச்சேரியில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற பின்னர் சென்னை வந்தனர். மாணவர்கள் 20 பேர் அண்ணா சதுக்கம் முதல் பெரியார் நகர் வரை செல்லக்கூடிய மாநகரப் பேருந்தில் ஏறினார்கள். பேருந்து நடத்துநர் வில்சன், பயணச்சீட்டு எடுக்கும் படி கேட்டபோது, லட்சுமணன் என்ற மாணவர் கேலி செய்யும் விதத்தில் பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கும், நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

வாக்குவாதம் முற்றியதில் பேருந்து நடத்துநர் வில்சனை மாணவர்கள் சரமாரியாக தாக்கினர். அவர்களை தடுத்த பேருந்து ஓட்டுநரும் தாக்கப்பட்டார். இதனை பார்த்ததும் அங்கிருந்த ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தெலங்கானா மாணவர்களை தாக்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் காவல்துறையினர் லட்சுமணன் உள்பட 4 மாணவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் கபடி பயிற்சியாளர் லட்சுமணன் என்ற மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com