மது அருந்திவிட்டு வந்த தந்தை: மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற மகள்!
மதுரை அலங்காநல்லூரில் தந்தை மது அருந்தி வந்ததால் மகள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, நல்லைநாயக்கர் பட்டியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளியான சிவக்குமரன். மதுக்கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து மது அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் சிவக்குமரனுக்கும், அவரது மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு வேதனையடைந்த சிவக்குமரனின் 18 வயது மகள் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். மகள் தீ வைத்துக் கொண்டதைக் கண்ட தாய், மகளைக் காப்பாற்ற முற்பட்டார். அப்போது அவர் மீதும் தீ பற்றிக் கொண்டது.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தாயையும், மகளையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகள் 65 சதவீத தீக்காயங்களுடனும், தாய் 45 சதவீத தீக்காயங்களுடனும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.