TET தேர்வில் வென்ற ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் - 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

TET தேர்வில் வென்ற ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் - 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
TET தேர்வில் வென்ற ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் - 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்படும் மறுநியமனத் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அவர்கள் TET தேர்வுக்கான வயது வரம்பை 58ஆக உயர்த்தக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2ஆவது நாளாக இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர். போராட்டத்தின் போது இரண்டு பெண்கள் மயங்கிவிழுந்தது போராட்டக்காரர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

இவர்களின் கோரிக்கைகளாக, “ஏற்கனவே TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்படும் மறு நியமனத் தேர்வு என்ற 149ஐ அரசாணையை ரத்து செய்ய வேண்டும், TET தேர்வுக்கான வயது வரம்பை 58-ஆக உயர்த்த வேண்டும்., பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் கடந்த 8 ஆண்டுகளாக ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்” உள்ளிட்டவை உள்ளன.
இன்றைய போராட்டத்தில் இரு பெண்கள் மயங்கி விழுந்தபோதும், பலர் குழந்தைகளுடன் 2-ம் நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டு வருகிறார்கள். தங்களது இரண்டு நாள் போராட்டத்திற்கு அரசு இதுவரை எந்த ஒரு செவி சாய்க்கவில்லை என்று போர்ட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வேதனை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com