ஆசிரியர் தினம்: டாக்டர் ராதாகிருஷ்ணனின் ஓவியத்தை வரைந்து சாதனை படைத்த சேலம் மாணவி

ஆசிரியர் தினம்: டாக்டர் ராதாகிருஷ்ணனின் ஓவியத்தை வரைந்து சாதனை படைத்த சேலம் மாணவி

ஆசிரியர் தினம்: டாக்டர் ராதாகிருஷ்ணனின் ஓவியத்தை வரைந்து சாதனை படைத்த சேலம் மாணவி

ஆசிரியர் தினத்தை போற்றும் வகையில் சேலத்தை சேர்ந்த மாணவி 600 சதுரடியில் ஸ்ப்ரே பெயிண்ட்டிங் மூலம் டாக்டர் ராதாகிருஷ்ணனின் ஓவியத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார்.

வாழ்க்கை எனும் வாயிற்கதவின் திறவுகோலாக விளங்கும் ஆசிரியர்களை போற்றும் வகையில் ஆசிரியர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சேலம் கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி அக்ஷதா தனது கலைத்திறன் மூலம் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஓவியத்தை வடிவமைத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் தான் மேற்கொண்ட தனித்திறன் பயிற்சி வாயிலாக 600 சதுர அடி பரப்பளவில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் ஓவியத்தை வரைந்து அந்த ஓவியத்திற்கு ஸ்ப்ரே பெயிண்ட்டிங் மூலம் வண்ணம் கொடுத்துள்ளார். இரண்டு மணி நேரம் 15 நிமிடத்தில் 510 தாள்களை பயன்படுத்தி இந்த படைப்பை அவர் உருவாக்கி அசத்தினார்.

ஆசிரியர்களின் பெருமையை போற்றும் விதமான மாணவி அக்ஷதாவின் இந்த முயற்சியை வர்ச்யூ உலக சாதனை புத்தகம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com