50,000 சாக்பீஸ்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட காமராஜர் உருவம் - பள்ளி மாணவர்கள் அசத்தல்

50,000 சாக்பீஸ்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட காமராஜர் உருவம் - பள்ளி மாணவர்கள் அசத்தல்

50,000 சாக்பீஸ்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட காமராஜர் உருவம் - பள்ளி மாணவர்கள் அசத்தல்
Published on

சங்கரன்கோவிலில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 50,000 சாக்பீஸ்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட  பெருந்தலைவர் காமராஜர் உருவத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120 ஆவது பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவிகள்,  50,000 சாக்பீஸ்களைக் கொண்டு காமராஜர் உருவத்தை தரையில் 30 அடி நீளத்தில் வடிவமைத்தனர்.
 

காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை 4 மணி நேரம் வடிவமைக்கப்பட்ட  பெருந்தலைவர் காமராஜரின் சாக்பீஸ் உருவத்திற்கு பள்ளி செயலர் ஐ.திலகவதி, முதல்வர் நா.பழனிச்செல்வம், நிர்வாக இயக்குனர் ராஜேஷ் கண்ணா மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

இதையும் படிக்கலாம்: தமிழ்நாட்டின் கல்விக் கண்ணை திறந்த 'படிக்காத மேதை'.. கர்ம வீரரின் ஆட்சி ஏன் பொற்கால ஆட்சி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com