வகுப்பறையில் பிறந்தநாள் கொண்டாடிய ஆசிரியர், கேக் ஊட்டி விட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

வகுப்பறையில் பிறந்தநாள் கொண்டாடிய ஆசிரியர், கேக் ஊட்டி விட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!
வகுப்பறையில் பிறந்தநாள் கொண்டாடிய ஆசிரியர், கேக் ஊட்டி விட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அரசுப் பள்ளி வகுப்பறையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பங்களாபுதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சார்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக மணிகண்டன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு ஜூன் 16 அன்று பிறந்தாளை முன்னிட்டு அப்பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் மாணவ, மாணவிகள் முன்னிலையில் பிறந்த நாள் கேக் வெட்டியுள்ளனர். அதில் முதல் கேக் துண்டை அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மணிகண்டனுக்கு ஊட்டி விட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலறிந்த குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்ரமணியன் விசாரணை செய்து ஆசிரியர் மணிகண்டன் மற்றும் தலைமை ஆசிரியை ஆகிய இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com