\
ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளை படம்பிடித்த ஆசிரியர் ராஜகோபாலன்: விசாரணையில் அம்பலம்

ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளை படம்பிடித்த ஆசிரியர் ராஜகோபாலன்: விசாரணையில் அம்பலம்

ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளை படம்பிடித்த ஆசிரியர் ராஜகோபாலன்: விசாரணையில் அம்பலம்
Published on: 

தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்புகளின்போது மாணவிகளை படம் பிடித்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில், சென்னை கே.கே.நகர் தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவரை, அசோக் நகர் மகளிர் போலீசார், 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். 5 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஒவ்வொரு புகாருக்கும் 50 கேள்விகளை தயாரித்து அதற்கு பதில் அளிக்கும்படி விசாரித்துள்ளனர்.

பாலியல் தொல்லை கொடுத்தது பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தே நடந்ததா? மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ பதிவிட்டது ஏன்? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணையின்போது ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை zoom செய்து, ஆபாசமாக புகைப்படம் எடுத்தது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து இன்று மாலை 3 மணி வரை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com