1ம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியை

1ம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியை
1ம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியை

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஒன்றாம் வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கிய‌ ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் 6- வயது மகன் ஈஸ்வர். மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி சென்றுவிட்டு, நேற்று வீடு திரும்பிய சிறுவன் தனியாக உட்கார்ந்து அழுவதை கண்ட பெற்றோர் விசாரித்தபோது ஆசிரியை அடித்தது தெரியவந்தது. அவன் உடலில் பலத்த காயங்களும் இருந்தன. இதையடுத்து குழித்துறை மருத்துவமனையில்‌ சிறுவனை அனுமதித்த பெற்றோர், மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுவனை கடுமையாகத் தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com