\
கடலூர்: மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது

கடலூர்: மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது

கடலூர்: மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது
Published on: 

கடலூர் மாவட்டத்தில் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் வகுப்புக்கு வரவில்லை என்ற காரணத்திற்காக அவரை முட்டி போட வைத்து பிரம்பால் இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணி என்பவர் கடுமையாக அடித்துள்ளார். இதோடு நிற்காமல் அந்த மாணவரை ஆசிரியர் கால்களால் எட்டியும் உதைத்தார். சக மாணவரால் படம் பிடிக்கப்பட்ட இந்தக் காட்சி சமூகவலைத்தலங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர் அளித்த புகாரின் பேரில், சிறுவர்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் ஆசிரியர் சுப்பிரமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com