\
பஜ்ஜி நன்றாக இல்லை என்ற கஸ்டமரை கத்தியால் குத்திய டீக்கடைக்காரர்

பஜ்ஜி நன்றாக இல்லை என்ற கஸ்டமரை கத்தியால் குத்திய டீக்கடைக்காரர்

பஜ்ஜி நன்றாக இல்லை என்ற கஸ்டமரை கத்தியால் குத்திய டீக்கடைக்காரர்
Published on: 

பஜ்ஜி நன்றாக இல்லை என கூறிய கஸ்டமரை, டீக்கடைக்காரர் கத்தியால் குத்திய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ‌ஞானமணி, இதே பகுதியில் உள்ள எலெக்ரிக்கல் கடையில் தான் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் டீக்கடைக்கு சென்ற ஞானமணி, டீ-யுடன் சேர்த்து பஜ்ஜியை வாங்கி சுவைத்துள்ளார். என்னப்பா இது? பஜ்ஜி நன்றாகவே இல்லை என ஞானமணி கூற, டீ மாஸ்டர் அருணுக்கும், அவருக்கும் பயங்கர தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த டீ மாஸ்டர் அருண், ‌வாழைக்காய் வெட்டும் கத்தியை எடுத்து, ஞானமணியை குத்தியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பூக்கடை காவல்துறையினர், ஞானமணியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தப்பியோடிய அருண் குறித்து‌ விசாரணை நடத்தியதில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அதே பகுதியில் பதுங்கியிருந்த அருணை காவல்துறையினர் கைது செய்தனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com