\
காலை 8 முதல் நண்பகல் 12 வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் - புதிய கட்டுப்பாடு அறிவிப்பு

காலை 8 முதல் நண்பகல் 12 வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் - புதிய கட்டுப்பாடு அறிவிப்பு

காலை 8 முதல் நண்பகல் 12 வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் - புதிய கட்டுப்பாடு அறிவிப்பு
Published on: 

தமிழகத்தில் நாளை முதல் காலை 8 மணிமுதல் நண்பகல் 12 வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாளைமுதல் தமிழகத்தில் மேலும் பல்வேறு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளது. அதன்படி தற்போது நண்பகல் 12 மணிமுதல் இரவு 9 மணிவரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை நாளைமுதல் குறைத்துள்ளது.

மே 6ஆம் தேதிமுதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டாஸ்மாக் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது குறித்து விமர்சனங்கள் எழும்பிவந்தன. தற்போது தமிழக அரசு நாளைமுதல் காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com