\
தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு
Published on: 

உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் மதுபானங்கள் விற்கப்படுகின்றன என்ற வாதத்தையடுத்து, டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி இருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. அத்துடன் கட்டுப்பாடுகளுக்கு இடைக்கால தடைவிதித்து உள்ளதாகவும் கூறியது. இது தொடர்பான வழக்கை 8 வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஆகவே மீண்டு கடைகளைத் திறப்பதற்கு எந்தச் சிக்கலும் இருக்காது எனத் தெரிகிறது. இதையடுத்து நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com