\
நாளைய ஊரடங்கு சிறப்பு தளர்வில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு அனுமதியில்லை!

நாளைய ஊரடங்கு சிறப்பு தளர்வில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு அனுமதியில்லை!

நாளைய ஊரடங்கு சிறப்பு தளர்வில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு அனுமதியில்லை!
Published on

தமிழகத்தில் ஊரடங்கு சிறப்பு தளர்வில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. 

தமிழகத்தில் வருகிற 24ஆம் தேதிமுதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளும் இயங்க என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிவரையிலும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டும் காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி இல்லை என்ற செய்தி மதுபிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தமுறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது இரண்டு நாட்கள் மதுக்கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரேநாளில் 426 கோடி ரூபாய்க்கும் மேல் மதுவிற்பனையானது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com