40 நாட்களுக்குப் பின் மதுக்கடை திறப்பு : அலைமோதிய கூட்டத்தால் அடைப்பு..!

40 நாட்களுக்குப் பின் மதுக்கடை திறப்பு : அலைமோதிய கூட்டத்தால் அடைப்பு..!
40 நாட்களுக்குப் பின் மதுக்கடை திறப்பு : அலைமோதிய கூட்டத்தால் அடைப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் தமிழக எல்லையில் உள்ள ஆந்திர மதுக்கடை திறக்கப்பட்டதால் ஏராளமான மதுப்பிரியர்கள் கொரோனா அச்சத்திற்கிடையே குவிந்தனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தனர். இந்நிலையில் ஊரடங்கில் தளர்வு பிறப்பிக்கப்பட்டு, பச்சை நிறம் கொண்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று முதல் மதுக்கடைகள் திறக்க ஆந்திர மாநில அரசு நடவடிக்கை எடுத்ததுள்ளது. அதன்படி ஆந்திராவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

அதேசமயம் 25 சதவீதம் விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை மது விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 41 நாட்களாக மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில் இன்று திறக்கப்பட்டதும், மது பாட்டில்களை வாங்க மதுப்பிரியர்கள் கூடினர். அவர்களை நீண்ட வரிசையில் போலீஸார் ஒழுங்குபடுத்தினர். சமூக இடைவெளியுடன் மது விற்பனை நடைபெறுகிறது.

இதேபோன்று திருத்தணி அருகேயுள்ள கனகம்மாசத்திரம், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளுக்கு அருகேவுள்ள ஆந்திர எல்லைப்பகுதிகளிலும் மது விற்பனை தொடங்கியது. மதுவை வாங்குவதற்கு திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் குவிந்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நின்று அவர்கள் மதுவை வாங்கிச்சென்றனர். இதற்கிடையே கூட்டம் மேலும் அதிகரித்ததால் கட்டுப்படுத்த முடியாமல் கனகம்மாசத்திரம் மதுக்கடைகள் மூடப்பட்டன.

பலிஜகண்டிகை பகுதியிலும் தமிழக மக்கள் குவிந்ததால் சமூக இடைவெளி சீர்குலைந்து நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பள்ளிப்பட்டு வட்டாசியர் செல்வகுமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனஞ்செயன் ஆகியோர் புகாரின் பேரில் அங்கும் மதுக்கடைகள் மூடப்பட்டன. தமிழக எல்லையையொட்டியுள்ள 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆந்திர அரசின் மதுக்கும் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com