டாஸ்மாக் கடை திறப்பு: 2 நாட்களில் 291.96 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை

டாஸ்மாக் கடை திறப்பு: 2 நாட்களில் 291.96 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை
டாஸ்மாக் கடை திறப்பு: 2 நாட்களில் 291.96 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சுமார் ஒரு மாத காலத்திற்கு பிறகு டாஸ்மாக் மதுபான கடைகளை கடந்த திங்கள்கிழமை முதல் காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை இயங்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. தற்போது நோய் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது. அரசு, கடைகள் இயங்க வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. 

இரண்டு நாட்களை விற்பனை எவ்வளவு?

இந்நிலையில் இரண்டு நாட்களில் மட்டும் 291.96 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 14ஆம் தேதி அன்று 164.87 கோடி ரூபாய்க்கும், 15 ஆம் தேதி அன்று 127.09 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. 

மண்டல வாரியாக விற்பனை நிலவரம்!

மதுரை 14 ஆம் தேதி அன்று (49.96 கோடி), 15 ஆம் தேதி அன்று (37.28 கோடி). சென்னை மண்டலம் 14 ஆம் தேதி அன்று (42.96 கோடி), 15 ஆம் தேதி அன்று (33.41 கோடி). திருச்சி மண்டலம் 14 ஆம் தேதி அன்று (33.65 கோடி), 15 ஆம் தேதி அன்று (27.64 கோடி). சேலம் மண்டலம் 14 ஆம் தேதி அன்று (38.72 கோடி), 15 ஆம் தேதி அன்று (28.76 கோடி).    

பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகளவில் கூடுவதாக தகவல் வெளியாகி வருகிறது. நீண்ட வரிசையில் நின்று மாதுபானங்களை வாங்கி செல்கின்றனர். 

மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு‌ என்று அரசு வலியுறுத்தினாலும் அதன் விற்பனை மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com