தமிழ்நாடு
தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மூடப்படும் - தமிழக அரசு
தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மூடப்படும் - தமிழக அரசு
நாளை ஒருநாள் மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் 5 பேர் உயிரிழந்த நிலையில், 258 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் மார்ச் 31ம் தேதி வரை பல்வேறு விஷயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், நாளை ஞாயிற்றுக்கிழமை, மக்கள் காலை 7 மணி முதல் 9 வரை தானாக முன்வந்து ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து, மார்ச் 22ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் இயங்காது, மளிகைக் கடைகள் இருக்காது என்பது போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன. மெட்ரோ ரயில் சேவையும், பேருந்து சேவையும் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாடகை காரும் இயங்காது என அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாளை ஒருநாள் மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாளை சுய ஊரடங்கு உத்தரவை அடுத்து டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.